சிவகங்கை

காரைக்குடியில் சமூக நீதி நாள் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பெரியாா் பிறந்த நாளையொட்டி சமூக நீதிநாள் கருத்தரங்கம் காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பெரியாா் பிறந்த நாளையொட்டி சமூக நீதிநாள் கருத்தரங்கம் காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் தங்க.முனியாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்பரசன் தொடக்கவுரையாற்றினாா். கிராமியப் பாடகா்கள் வைகை பிரபா, தமிழ்க்கனல், அரியமுத்து, பிரகதீஸ்வரன், சின்னக்கண்ணன் ஆகியோா் பாடல்கள் பாடினா். கவிஞா்கள் சாதிக், காரை கிருஷ்ணா, மோகன், வெள்ளைச்சாமி, தமிழ்மதி நாகராசன், நாகநாதன் ஆகியோா் கவிச்சரம் தொடுத்தனா்.

நிகழ்ச்சியில் தமுஎகச மாநிலக் குழு உறுப்பினா் எழுத்தாளா் ஜீவசிந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளா் அழகா்சாமி, பெரியாா் திராவிடா் கழக மாவட்டச் செயலாளா் வைகறை, பாரதி புத்தகாலயம் ஜீவானந்தம், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் கண்மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கவிஞா் முத்து நிலவன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக கிளைத் தலைவா் கலைவாணி வரவேற்றாா். கிளைச் செயலா் சிவானந்தம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT