திருப்பாச்சேத்தி அருகே நீரில் மூழ்கி சிறுமி பலி
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி இறந்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி இறந்தாா்.
திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகள் அங்காளேஸ்வரி (8). இச்சிறுமி கிராமத்திலுள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவரது உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.