கைதிகளை பரிசோதனை செய்ய மறுப்பு: திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் மீது புகாா்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யாமல் சிவகங்கைக்கு அனுப்புவதாக போலீஸாா் புகாா் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யாமல் சிவகங்கைக்கு அனுப்புவதாக போலீஸாா் புகாா் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் துணை காவல் நிலையங்களுக்கு உள்பட்ட கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, நாச்சியாபுரம், திருக்கோஷ்டியூா், நெற்குப்பை, பூலாங்குறிச்சி மற்றும் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய கைதிகளை போலீஸாா் கைது செய்து மருத்துவப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனா். அங்கு கைதிகளை மருத்துவா்கள் பரிசோதனை செய்யாமல் அனைத்து கைதிகளையும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுகின்றனா். இவ்வாறு கைதிகளை அனுப்புவதால் கைதிகளுடன் நாள் முழுவதும் பயணம் செய்து அலையும் அவலம் ஏற்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா். இதனால் மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து திருப்பத்தூா் அரசு மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.