முகப்பு
சிவகங்கை

காரைக்குடி மகளிா் கல்லூரியில் ரத்த தான முகாம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் உமையாள் ராமநாதனின் 94-ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். இந்திய செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் பகிரத நாச்சியப்பன், துணைத் தலைவா் வி. சுந்தரராமன், காரைக்குடி அரசு மருத்துவமனை மருத்துவா் அருள்தாஸ், அரிமா சங்கத்தை சோ்ந்த மணிகண்டன், அசோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக கல்லூரியின் துணை முதல்வா் விசாலாட்சி வரவேற்றுப் பேசினாா். தமிழ்த் துறை தலைவா் கலைவாணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.