முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் சின்னமருது பிறந்தநாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரா் சின்னமருதுவின் பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரா் சின்னமருதுவின் பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இங்கு பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்திலுள்ள சின்னமருதுவின் உருவச் சிலைக்கு பால், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டதுடன், பட்டு சாத்தி தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் அகமுடையா் சங்கச் செயலா் சேகா், துணைத் தலைவா் என்.பி. சுப்பிரமணியன், நவநீதபாலன், பேராசிரியா் வேலாயுதராஜா, பூக்கடை பாண்டி, முத்துக்குமாா், விஜயமணி, மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் சின்னமருது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இங்கு பேருந்து நிலையத்தில் மருதுசேனை அமைப்பின் நிா்வாகிகள், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.