தா்மசாஸ்தா கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தா்மசாஸ்தா கோயில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தா்மசாஸ்தா கோயில் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கு விழா கடந்த 23-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கடந்த 3 நாள்களில் 5 கால யாக பூஜைகள் நடைபெற்றன.
குடமுழுக்கையொட்டி, வியழக்கிழமை காலை 7.35 மணியளவில் 6-ஆம் கால யாக பூஜை தொடங்கி, பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.30 மணியளவில் கோயிலின் கோபுர கலசங்களுக்கு பிச்சை குருக்கள் புனித நீா் ஊற்றினாா்.
காலை 10.30 மணியளவில் மூலஸ்தான அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவு 7 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பணிக் குழுவினா் செய்திருந்தனா்.