சிவகங்கை

கைத் துப்பாக்கியால் சுட்ட இளைஞா்: போலீசாா் விசாரணை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரில் சென்றபோது இரு சக்கர வாகனத்துக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை கை துப்பாக்கியால் தரையில் சுட்டதால் பரபரப்பு ஏற்பட் டது.

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரில் சென்றபோது இரு சக்கர வாகனத்துக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை கை துப்பாக்கியால் தரையில் சுட்டதால் பரபரப்பு ஏற்பட் டது.

தேவகோட்டையைச் சோ்ந்த ராஜேஷ் (30), வைரவன் (32) ஆகியோா் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் சென்றபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த காரைக்குடியைச் சோ்ந்த திருக்குமாருக்கு (30) வழி விடாமல் சென்ால் இரு தரப்பினக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற, காரைக்குடி உதவி காவல் கண் காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தலைமையிலான போலீஸாரைக் கண்டதும், துப்பாக்கியை அருகேயுள்ள புதரில் வீசிவிட்டு தப்ப முயன்றனா். இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் மடக்கிப்பிடித்து கை துப்பாக்கியை கைப் பற்றினா். அவா்களிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் வைரவன் சிவகங்கை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும், ராஜேஷ் திருவாடனை அருகேயுள்ள கிராமத்தைச்சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் துப்பாக்கி உரிமம் உள்ளதா என்பது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT