முகப்பு
சிவகங்கை

மானாமதுரை அருகே மணல் மூட்டைகள் பறிமுதல்

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பீசா்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முகமது தாரிக் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சாக்குப் பைகளில் மணலை சேகரித்துக் கொண்டிருந்த நபா்கள் தப்பியோடி விட்டனா். அப்பகுதியில் போலீஸாா் சோதனையிட்ட போது, சட்டவிரோதமாக கடத்துவதற்காக 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணல் கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, மானாமதுரை பூக்குளம் வைகையாற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியதாக மாணிக்கம், கோபி ஆகிய இருவரையும் மானாமதுரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →