முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் 89-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் 89-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

4 பிரிவுகளாக இந்த மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. நடுமாடு பிரிவில் இளங்கிபட்டி அா்ச்சுணன் மாடுகள் முதலிடமும், தானிப்பட்டி ராமசாமி, புதுப்பட்டி இளையராஜா ஆகியோரின் மாடுகள் முறையே 2-ஆம், 3 ஆம் இடங்களையும் பிடித்தன. பூச்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன், கனகவள்ளி ஆகியோா் மாடுகள் முதல் 2 இடங்களைப் பிடித்தன.

பெரியமாடு பிரிவில் புலிமலைப்பட்டி முனிச்சாமியின் மாடுகள் முதலிடமும், மாங்குளம் தேவேந்திரனின் மாடுகள் 2-ஆம் இடமும் பிடித்தன. சின்ன மாடு பிரிவில் அவனியாபுரம் மோகன்சாமி, புதுப்பட்டி மணி ஆகியோரின் மாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் கேடயமும், பண முடிப்பும் பரிசாக வழங்கபட்டன.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.