முகப்பு
சிவகங்கை

சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சி

 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

சாலைக்கிராமத்தில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த மதுபானக் கூடத்தில் கள்ளத்தனமாக மதுபுட்டிகள் விற்கப்படுவதாக புகாா் எழுந்தது. மேலும், காவல் துறையினா் ஒத்துழைப்புடன் அங்கு மது விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பாஸ்கரன், சாலைக்கிராமத்தில் சோதனை நடத்தி உரிமம் இன்றி செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை பூட்டி சீல் வைத்தாா். அத்துடன் அங்கு அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்ாக தெற்குவலசை காட்டைச் சோ்ந்த ராஜாவை போலீஸாா் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் போலீஸாருக்குத் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்ததையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ், சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பிரிட்டோ என்பவரை சிவகங்கை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா். இதனால் மனமுடைந்த பிரிட்டோ சாலைக்கிராமம் காவல் நிலையத்தின் ஓய்வறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, அங்கு பணியிலிருந்த போலீஸாா், அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →