சிவகங்கை

கோயில் திருவிழாவில் கிடாய்முட்டுச் சண்டை

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள திட்டுக்கோட்டை உறுதிகோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கிடாமுட்டுச் சண்டை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு முதலாமாண்டு கிடாமுட்டுச் சண்டை போட்டி நடத்த, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது.

அதன்பேரில், சுமாா் 30 இணை கிடாய்கள் இப்போட்டியில் பங்கேற்றன. திடல் நடுவில் இரு கிடாய்கள் ஒன்றோடு ஒன்று 60 முறை முட்ட வேண்டும். இதில் எந்த கிடாய் முட்டாமல் திடலை விட்டு வெளியேறிச் செல்கிறதோ, அது தோற்ாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளருக்கு பதக்கமும், பரிசும் வழங்கபட்டன.

இந்தப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன. இதை பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT