சிவகங்கை

மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு: 50 மாடுபிடி வீரா்கள் காயம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம், திருவேட்டை அய்யனாா் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 800- க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்தவா்கள் மானாமதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், நாற்காலி, சில்வா் அண்டாக்கள், தங்கக் காசுகள் வெள்ளிக் காசுகள், மிதிவண்டி, ரொக்கப் பணம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள் செய்தனா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன், காவல் ஆய்வாளா் முத்துகணேஷ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT