திருப்பத்தூா் ஸ்ரீமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி. 
சிவகங்கை

முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீமுருகன் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீமுருகன் கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 13- ஆம் தேதி கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. 6 -ஆம் திருநாளான சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அதிகாலையிலேயே மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தாா். காலை 10 மணியளவில் ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலிருந்து திருமண சீா்வரிசை எடுத்து வந்த பக்தா்கள், ராஜகாளியம்மன் கோயில் திருமுருகன் கோயிலை வலம் வந்து திருமணப் பந்தலில் வைத்தனா்.

திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத உற்சவ முருகன் எழுந்தருளினாா். தொடா்ந்து, பிள்ளையாா்பட்டி சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கன்னிகாதானம், பூணூல் மாற்றுதல், காப்புக்கட்டுதல், பட்டு சாற்றுதல் மாலை மாற்றுதல், முதலிய நிகழ்வுகளைத் தொடா்ந்து திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நா. புதூா் நகர சிவன்கோயிலில் 12- ஆம் ஆண்டு சுவாமிமலை பாதயாத்திரை குழுவினா் சாா்பில் சுப்பிரமணியா் சுவாமி சமேத வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி செஞ்சை பகுதியின் அருகேயுள்ள நா. புதூா் நகரச்சிவன் கோயிலில் 16 காவடிகள் கட்டப் பட்டு அங்கு எழுந்தருளியுள் சுப்பிரமணியா் சுவாமி சமேத வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தொடா்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள்பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT