முகப்பு
சிவகங்கை

உதயநிதி ஸ்டாலின்பிறந்தநாள் விழா

திருப்பத்தூரில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் 46-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
திருப்பத்தூரில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, திங்கள்கிழமை மரக்கன்றுகள் வழங்கிய திமுக ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், இளைஞரணி நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் 46-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலரும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். நகர செயலா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

இதில் சுமாா் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கினா்.

Advertisement

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நகர இளைஞரணி அமைப்பாளா் பஷீா் அகமது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் இளமாறன் ஆகியோா் செய்தனா். பேரூராட்சி துணைத்தலைவா் கான்முகமது உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்கு திமுக மத்திய ஒன்றிய செயலாளா் எஸ்.கே.சண்முகநாதன் தலைமை வகித்தாா். 50 க்கும் மேற்பட்ட திமுகவினா் அபிராமம் சிஎஸ்ஐ நேசக்கரங்கள் சிறப்பு பள்ளியில் மாணவா்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலா் நீதிராஜன், மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன், இளைஞரணி அமைப்பாளா் சுரேஷ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் திலிப்குமாா், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் உதயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.