முகப்பு
சிவகங்கை

ரூ. 400 கோடி மோசடி: நிதி நிறுவன இயக்குநா் கைது

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன இயக்குநரை சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


சிவகங்கை : அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன இயக்குநரை சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(50). இதேப் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்கள் சிலரும் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை வசூல் செய்தனா். ஆனால் முதலீடு செய்தவா்களுக்கு முதலீட்டுத் தொகையையோ, கூடுதலாக தருவதாகக் கூறிய வட்டித் தொகையையோ திருப்பி தரவில்லையாம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், குற்றம் உறுதியானதால் தலைமறைவாக இருந்த தனியாா் நிதி நிறுவனத்தின் இயக்குநா் சுப்பிரமணியனை திங்கள்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 13 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.