மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீடத்தை திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றிய சிவகங்கை மறைமாவட்ட ஆயா் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி. 
சிவகங்கை

மானாமதுரை புனித குழந்தை தெரசாள்ஆலயத்தில் புதிய திருப்பீடம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீட திறப்பு விழாவும், ஆண்டுப் பெருவிழா கொடியேற்றமும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பீட திறப்பு விழாவும், ஆண்டுப் பெருவிழா கொடியேற்றமும் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயா் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய திருப்பீடத்தை திறந்து வைத்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினாா். இதில் குழந்தை தெரசாள் ஆலய பங்குத்தந்தை எஸ்.எஸ். பாஸ்டின், மறை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான அருட்பணியாளா்கள், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக இந்த ஆலயத்தின் 84- ஆம் ஆண்டு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. புனித குழந்தை தெரசாள் உருவம் தாங்கிய கொடியை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஆயா் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மின் அலங்கார ரத பவனி வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் அக்டோபா் 1-ஆம் தேதி நற்கருணை பவனியுடன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை புனித குழந்தை தெரசாள் ஆலய பங்குத்தந்தை எஸ்.எஸ். பாஸ்டின், பங்கு இறை மக்கள், அருள் சகோதரிகள், பங்கு பேரவையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT