சிவகங்கை

கிரிக்கெட் போட்டி: கீழக்கரை கலை, அறிவியல் கல்லூரி வெற்றி

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு கோப்பை கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை சையது ஹமீதியா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

DIN

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான, அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு கோப்பை கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை சையது ஹமீதியா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

அழகப்பா பல்கலைக்கழக உடல்கல்வியல் துறை விளையாட்டு மைதானத்திலும், அழகப்பா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் 10 கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில், ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இறுதிப் போட்டியில் கீழக்கரை சையது ஹமீதியா கலை, அறிவியல் கல்லூரி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி இரண்டாமிடத்தையும், அழகப்பா அரசு கலைக் கல்லூரி மூன்றாமிடத்தையும், அழகப்பா பல்கலைக்கழக அணி நான்காம் இடத்தையும் பெற்றன.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவா் ஏ. பி.எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுக் கோப்பைகளை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி வழங்கினாா்.

விழாவில் அழகப்பா பல்கலைக் கழக உடல்கல்வி இயக்குநா் செந்தில்குமரன், சையது ஹமீதியா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ராஜசேகா், சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க புரவலா் வரதராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உடல்கல்வி இயக்குநா் அசோக்குமாா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் செய்தனா்.

முன்னதாக, பேராசிரியா் கருணாகரன் வரவேற்றாா். கல்லூரியின் உடல்கல்வித்துறை இயக்குநா் அசோக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT