முகப்பு
சிவகங்கை

தோ்தல் பணியின்போது மோதல்: விஏஓ, வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:09 PM
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருப்புவனம் அருகே மாங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் (35) தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதே போல, கொந்தகை வருவாய் ஆய்வாளா் முத்துமுருகனும் (33) பணியில் இருந்தாா்.

அப்போது கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன், தோ்தல் உணவுத் தொகை வழங்கும்படி வருவாய் ஆய்வாளா் முத்துமுருகனிடம் கேட்டாராம். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் அவா்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments