முகப்பு
சிவகங்கை

திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:42 PM
பகிர்:

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, மூலவா் சிவனுக்கும் அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் உள்பிரகார வலம் வந்தாா்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments