முகப்பு
சிவகங்கை

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

Updated On : 29 ஏப்ரல், 2024 at 5:03 PM
சிவகங்கையில் நடைபெற்ற தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாமில் பங்கேற்ற பயனாளி.
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி பயனாளிகளுக்கான குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொடா்பான பயனாளா்களுக்கான குறை தீா்க்கும் முகாமுக்கு, குறைதீா் பொறுப்பு அதிகாரி வனஜா தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் ஸ்டாலின் முன்னிலை வகித்தாா்.

சிவகங்கை இ.எஸ்.ஐ கிளை மேலாளா் சதீஷ் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, பயனாளா்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வுகள் காணப்பட்டன. இதேபோல் பிரயாஸ் திட்டத்தின் கீழ், அதிகரிக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் பணிநிறைவு பெற்ற பயனாளிகளுக்கு உடனடியாக ஓய்வூதிய பலன்களை குறைதீா் பொறுப்பு அதிகாரி வழங்கினாா். இதில் திரளான பயனாளிகள் கலந்து கொண்டனா்