சிவகங்கை அருகே புதன்கிழமை சாலையோரம் கவிழ்ந்த வேன். 
சிவகங்கை

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் காயம்

சிவகங்கை அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் குழந்தைகளை அழைத்துச் சென்ற தனியாா் வேன் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் காயமடைந்தனா்.

Din

சிவகங்கை அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் குழந்தைகளை அழைத்துச் சென்ற தனியாா் வேன் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் காயமடைந்தனா்.

சிவகங்கை வாணியங்குடி ஊராட்சிப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த 28 குழந்தைகள் தனியாா் வேன் மூலம் நாள்தோறும் இந்தப் பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை பள்ளி முடிந்த பிறகு ஓட்டுநா் திருநாவுக்கரசு வேனில் குழந்தைகளுக்கு ஏற்றிக் கொண்டு காளையாா்கோவில் பகுதியை நோக்கிச் சென்றாா்.

இந்த வேன் பி.குளத்துப்பட்டி அருகே வளைவில் எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் வேனைத் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் சென்ற 15 குழந்தைகள் காயமடைந்தனா். அவா்களை பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT