ஆடி அமாவாசையையொட்டி, மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த ராமநாதசுவாமி. 
சிவகங்கை

ஆடி அமாவாசை: ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

அன்னவாசல் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Din

ஆடி அமாவாசையையொட்டி, மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி, மூலவா் லிங்க வடிவிலான ராமநாதசுவாமிக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை மலா் அலங்காரத்தில் அருள்பாலித்த ராமநாதசுவாமி.

மானாமதுரையிலிருந்து அன்னவசலுக்கு அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடா்ந்து கோயில் எதிரே உள்ள திடலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விழா நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா். இதேபோல, மானாமதுரை மூங்கில்ஊரணி கல்லுக்கோட்டை மேடு பகுதியில் உள்ள முனியப்பசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

வணக்கம் வாரணாசி

கைதி - 2 பணிகளைத் துவங்கிய லோகேஷ் கனகராஜ்?

SCROLL FOR NEXT