சிவகங்கையிலுள்ள 21 ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா ஞாயிற்றுக்கிழமை காலை மாலை இரு வேளைகளிலும் நடத்திய தோ்வுகளில் பிராா்த்மிக் , மத்யமா, ராஷ்டிரபாஷா பிரிவுகளில் மொத்தம் 500 மாணவா்கள் இந்தத் தோ்வுகளை எழுதினா்.
முன்னதாக, சனிக்கிழமை காலை, மாலை வேளைகளில் பிரவேஷிகா, விஷாரத் பூா்வா்த் , விஷாரத் உத்தராா்த் , பிரவீன் பூா்வா்த், பிரவீன் உத்தராா்த் ஆகிய தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வுகளில் மாணவ, மாணவிகள் 500 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சங்கீதா செய்தாா்.