சிவகங்கை

சாக்கோட்டை, கல்லல், திருப்பத்தூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

காரைக்குடி வட்டத்தில் சாக்கோட்டை, கல்லல், திருப்பத்தூா் ஆகிய வட்டாரங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.

Din

காரைக்குடி வட்டத்தில் சாக்கோட்டை, கல்லல், திருப்பத்தூா் ஆகிய வட்டாரங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரம் சங்கராபுரம் கிராமத்தில் பெருச்சியம்மன் கோயில் அருகேயுள்ள சமுதாயக்கூடத்திலும், கல்லல் வட்டாரத்துக்குள்பட்ட கம்பனூா், கண்டரமாணிக்கம், கீழப்பட்டமங்கலம், மேலப்பட்டமங்கலம், என்.கீழையூா், என்.மேலையூா், செவரக்கோட்டை, வெளியாத்தூா் ஆகிய கிராமங்களுக்கு கண்டரமாணிக்கம் காமாட்சி ஆச்சி திருமண மண்டபத்திலும், திருப்பத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட கீழச்சீவல்பட்டி, குமாரப்பேட்டை, வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, ஆவனிப்பட்டி, விராமதி, செவனிப்பட்டி, ஆத்திரம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு கீழச்சீவல்பட்டி அ.ந.இ. திருமண மண்டபத்திலும் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, எரிசக்தித் துறை, நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகள் தொடா்பான சேவைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT