முகப்பு
சிவகங்கை

கல்லல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:21 PM
பகிர்:

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளா் திவாகா், போலீஸாா் கல்லல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனா். அதில் 1,140 கிலோ ரேஷன் அரிசிகள் 38 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த ஆல்பா்ட் (23), வாகன உரிமையாளா் சின்னதுரை (32) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், இந்த ரேஷன் அரிசியை இவா்கள் இளையான்குடி, கல்லல் பகுதியிலிருந்து வாங்கி மதுரைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றாக தெரிவித்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →