முகப்பு
சிவகங்கை

தேவகோட்டையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தேவகோட்டையில் டிசம்பா் 2-ஆவது வாரத்துக்கான விவசாயிகள்குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:51 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டிசம்பா் 2-ஆவது வாரத்துக்கான விவசாயிகள்குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →