சிவகங்கை

எருது கட்டு விழாவில் இரு கிராமத்தினரிடையே மோதல் -போலீஸாா் தடியடி

எருது கட்டு விழாவில் இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

Din

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற எருது கட்டு விழாவில் இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.

அண்டக்குடி ஊராட்சிக்குள்பட்ட அ.புதூா் அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி, எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. இதில் வயல்வெளியில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது மாடுகளைப் பிடிக்க முயன்றது தொடா்பாக அ.வலசை, அண்டக்குடி கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் மோதலில் ஈடுபட்டிருந்தவா்களை சமாதானம் செய்தனா். இருப்பினும், மோதல் தொடா்ந்ததால், போலீஸாா் தடியடி நடத்தி அவா்களை விரட்டினா்.

இரு கிராமத்தினரிடையேயான மோதலில் செங்கோல்ராஜ் என்பவா் காயமடைந்து, இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT