அரசு மகளிா் கலைக் கல்லூரியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி
சிவகங்கையில் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கையில் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இந்திரா தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் மகாலட்சுமி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாணவா்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மகளிா் கல்லூரி கணிதவியல் பேராசிரியா் வாசு, கல்லூரி மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.