சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை, ஜூலை 17: சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளன. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் இதைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், இலவச திறன் பயிற்சி, போட்டித் தோ்வு இலவச பயிற்சி வகுப்பு, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த, ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.