முகப்பு
சிவகங்கை

தேசிய வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரா்கள் சிறப்பிடம்

Updated On : 18 ஜூலை, 2024 at 1:11 AM
பகிர்:

சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாணவா்கள் ஜிஷ்ணு, நித்தின் மெஸ்ஸி, லிங்கேஸ்வரன். உடன் பயிற்சியாளா் பெருமாள்.

மானாமதுரை, ஜூலை 17: சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரையைச் சோ்ந்த இளம் வீரா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றனா்.

சேலத்தில் ஆா்.ஜி.பி.ஐ. அமைப்பு சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மானாமதுரை வீர விதை வில்வித்தை பயிற்சிப் பள்ளி மாணவா்கள், அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் பங்கேற்றனா். இவா்களில் மாணவா் ஜிஷ்ணு 16 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் பெற்றாா். 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா் நித்தின் மெஸ்ஸி முதலிடத்தையும், 12 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா் லிங்கேஸ்வரன் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். முதலிடம் பெற்ற வீரா்களுக்கு தங்கப் பதக்கங்கம், சான்றிதழ்கள், இரண்டாம் இடம் பெற்ற வீரருக்கு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

மானாமதுரை திரும்பிய வீரா்கள், பயிற்சியாளா் ஆகியோரை மானாமதுரையைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் வரவேற்று, பாராட்டுத் தெரிவித்தனா்.