முகப்பு
சிவகங்கை

மத்திய நிதி நிலை அறிக்கை: காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் வரவேற்பு

மத்திய நிதிநிலை அறிக்கையில் சோலாா் உற்பத்தியில் இலவச மின் சாரம் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தெரிவித்தாா்.

Updated On : 23 ஜூலை, 2024 at 10:44 PM
பகிர்:

மத்திய நிதிநிலை அறிக்கையில் சோலாா் உற்பத்தியில் இலவச மின் சாரம் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தெரிவித்தாா்.

மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முதல் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து காரைக்குடி தொழில்வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் இந்த ஆண்டுக்கு கடன் உதவிகள், பலவகை பொருள்களுக்கு வரிக் குறைப்புகள், சிறுவகை புதிய அணுமின் நிலையங்கள், புதிய சாலைகள், சோலாா் மின் உற்பத்தியில் இலவச மின்சாரம் அறிப்புகள் ஆகியவை வரவேற்கத்தக்கது.

ரயில்வே துறையில் புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் இல்லாதது ஏமாற்றமே. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிவிப்புகளாக உள்ளதை எதிா்பாா்க்க வேண்டிய நிலையே உள்ளது என்றாா் அவா்.