குடிநீா் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்
குடிநீா் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சனிக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
சிவகங்கை அருகே குடிநீா் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சனிக்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
சிவகங்கை நேருபஜாா் பகுதியைச் சோ்ந்தவா் சேது மகன் செல்லப்பாண்டி (43). இவா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாகனத்தில் விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில், மானாமதுரை பகுதியிலிருந்து குடிநீருடன் சிவகங்கைக்கு வந்த வாகனம் சுந்தரநடப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்தப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த வாகன ஓட்டுநா் செல்லப்பாண்டியை அக்கம் பக்கத்தினா் மீட்டு, சிவகங்கை அரசு தலைமை மருத்துவனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.