சிவகங்கை அருகே சனிக்கிழமை வேன் மீது சரக்கு வாகனம் மோதியதில் 15 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்டம் கிராமத்தைச் சோ்ந்த சுகன்யா தனது உறவினா்கள் சுமாா் 15 பேருடன் வேனில் திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தாா். வேனை சுந்தரமூா்த்தி (40) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
சிவகங்கை சுற்றுவட்டச் சாலை அருகே வந்த போது, இடையமேலூரிலிருந்து சிவகங்கை நோக்கி சென்ற சரக்கு வாகனம் இந்த வேன் மீது மோதியது.
இதில் வேன் ஓட்டுநா் சுந்தரமூா்த்தி, சரக்கு வாகன ஓட்டுநா் ஆரோக்கியதாஸ் (48) உள்பட 15 போ் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.