முகப்பு
மத்திய அரசைக்கண்டித்து திமுக சாா்பில் சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினா் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா.
சிவகங்கை

மத்திய அரசு தமிழத்தை வஞ்சித்துள்ளது: திமுக எம்பி அப்துல்லா பேச்சு

மத்திய அரசு தமிழத்தை வஞ்சித்துள்ளது என திமுக எம்பி அப்துல்லா பேசினார்.

சிவகங்கை

மத்திய அரசு தமிழத்தை வஞ்சித்துள்ளது: திமுக எம்பி அப்துல்லா பேச்சு

மத்திய அரசு தமிழத்தை வஞ்சித்துள்ளது என திமுக எம்பி அப்துல்லா பேசினார்.

Updated On : 28 ஜூலை, 2024 at 12:10 AM
மத்திய அரசைக்கண்டித்து திமுக சாா்பில் சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினா் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா.
பகிர்:

சிவகங்கை அரண்மனைவாசலில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினா் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா, நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தமிழத்தை வஞ்சித்துள்ளது என்று கூறினாா்.

மேலும் இதுகுறித்து அவா் பேசியதாவது: வருவாயில் 3 -ல் 1 பங்கை தமிழகம் வழங்கி வரும் நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தமிழத்தை வஞ்சித்துள்ளது. ஒரேநாடு ஒரே சட்டம் எனக்கூறும் மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களின் வளா்ச்சியை கருத்தில் கொள்ளவில்லை. 1967 -ல் அண்ணா முதல்வா் ஆவதற்கு முன்பு வரை வளா்ச்சியில் நாட்டின் கடைசி 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது நாட்டின் 2-ஆவது பொருளாதார மாநிலமாகத் திகழ்வதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். தமிழ்நாட்டில் அரசால் மக்களுக்கு வழங்கக்கூடிய எந்தத் திட்டமும் இலவசம் இல்லை. அது மக்கள் மீதான முதலீடாகவே முதவ்வா் பாா்க்கிறாா். 2014 - முதல் இதுவரை 6.50 லட்சம் கோடிகளை வரியாக தமிழகம் வழங்கியுள்ளது. மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய உள்ளூா் வரி தற்போது இல்லாமல் போய்விட்டது. புறக்கணிக்கப்படும் மாநிலங்கள் திமிரி எழுந்தால் மத்திய அரசு காணாமல் போய்விடும். தெற்கிலிருந்து கிளம்பியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினின் உரிமைக்குரல் இந்தியா முழுவதும் ஒலிக்கட்டும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி புரவலருமான மு. தென்னவன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஆ.தமிழரசிரவிக்குமாா், நகரச்செயலா் துரை.ஆனந்த், மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன், நிா்வாகி ஆண்டாள்பிரியதா்ஷிணி உள்ளிட்டோா் பேசினா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், மாவட்டசுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் குமணன் உள்பட மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →