முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் ஆா்ப்பாட்டம்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

Updated On : 26 ஜூன், 2024 at 1:56 AM
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்
பகிர்:

சிவகங்கை: சத்துணவு மையங்களில் காலிப்பணியிட்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவனஈா்ப்பு பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மங்கையா்கரசி, ஊரகவளா்ச்சி அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.செல்வக்குமாா், மாவட்டச் செயலா் ஆா். ஷீலா, குழந்தைகள் வளா்ச்சித்திட்ட ஊழியா் சங்கச் செயலா் விக்டோரியாமேரி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் என். செந்தில்குமாா், மாவட்டச் செயலா் க. ஜெயப்பிரகாஷ், நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்க மாநிலச் செயலா் பி. பிச்சை, மக்கள் நலப்பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் முத்துராமலிங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் ஏ. மிக்கேலம்மாள், மாவட்டப் பொருளாளா் அலமேலுமங்கை ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.