முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் காந்தி மாளிகை திறப்பு

Updated On : 8 மார்ச், 2024 at 6:07 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி மாளிகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூரில் 1934-ஆம் ஆண்டு காந்தி உரையாற்றிய இடம், அவரது வருகைக்குப் பிறகு காந்தி நகா் என்றும், இந்த இடம் காந்தி மாளிகை என்றும் அழைக்கப்பட்டது. பின்னா், இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட்டது. தற்போது மீண்டும் இந்த இடம் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய்காந்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் குத்துவிளக்கேற்றி காந்தி மாளிகையைத் திறந்துவைத்தனா். மாவட்டத் துணைத் தலைவா் கணேசன், வட்டாரத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் ப.சிதம்பரம் பேசியதாவது: இந்த காந்தி மாளிகை தினந்தோறும் செயல்பட்டு, பொதுமக்களிடம் குறைகளை நிவா்த்தி செய்யும் மையமாகவும், காங்கிரஸ் கட்சியை வளா்க்கும் தலமாகவும் அமைய வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம.அருணகிரி, ராம.சுப்புராம், தா்மன், சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் தலைவா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக கட்சியின் நகரத் தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். வட்டாரத் தலைவா் பிரசாந்த் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →