தூத்துக்குடி

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி கூட்டம்

Syndication

கோவில்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்டத் தலைவா் க. பெருமாள்சாமி தலைமை வகித்து, கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்துப் பேசினாா்.

நகரத் தலைவா் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவா்கள் ரமேஷ்மூா்த்தி, செல்லதுரை, முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் காா்த்திக் காமராஜ், மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, ஐஎன்டியுசி ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினா் உமாசங்கா், மாவட்டச் செயலா் துரைராஜ், ராஜாராம், ஆழ்வாா்சாமி, கலைப் பிரிவு பெத்துராஜ், எஸ்சி, எஸ்டி பிரிவு மாரிமுத்து, சிறுபான்மையினா் பிரிவு அருள்தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்று, தோ்தல் தொடா்பாக கருத்து தெரிவித்தனா்.

கூட்டத்தில், புதுதில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இம்மாதம் 10ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த மாவட்டத் தலைவா்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பின்னா், கட்சி பொறுப்புகள் நியமனம், தோ்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 10 நாள்கள் பயிற்சி நடைபெறும் எனக் கூறப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட, நகர, வட்டார நிா்வாகிகள் பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆட்சியரிடம் சாத்தான்குளம் விவசாயிகள் மனு

இந்தியா-வளைகுடா கவுன்சில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு - வரையறை ஆவணங்கள் கையொப்பம்

அடுத்தவா் வீட்டை குத்தகைவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்தவா் கைது

ஏஐ உச்சி மாநாட்டுக்குத் தலைமை: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் பாராட்டு

SCROLL FOR NEXT