முகப்பு
சிவகங்கை

அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம்

Updated On : 13 மார்ச், 2024 at 5:27 AM
காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காரைக்குடி நகர அதிமுக செயலா் சோ. மெய்யப்பன் தலைமை வகித்தாா்.

அதிமுக மாவட்ட இணைச் செயலா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகா்மன்ற அதிமுக உறுப்பினா்கள் ஏஜி. பிரகாஷ், தேவன், குருபாலு, அமுதா, கனகவல்லி, ராதா பாண்டியராஜன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா செந்தில்நாதன், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் புலவா் பழனியப்பன், இலக்கிய அணி செயலா் சின்னதுரை, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் மனிதச் சங்கிலியாக நின்று, கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் அதிகரித்து வருவதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.