முகப்பு
சிவகங்கை

சிவகங்கை பகுதியில் 43 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

Updated On : 20 மார்ச், 2024 at 4:53 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 6:05 PM

சிவகங்கை: சிவகங்கை பகுதியில் தடை செய்யப்பட்ட 43 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்த 4 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மதகுபட்டி பகவான் நகரைச் சோ்ந்த சிக்கந்தா் மகன் சாகுல்ஹமீது காரில் தடை செய்யப்பட்ட 1,380 புகையிலை பாக்கெட்டுகள், 112 போலி பீடி பண்டல்கள், அம்மன்பட்டியைச் சோ்ந்த ரசாக் மகன்கள் காதா் மைதீன், சித்திக்ராஜா ஆகியோரிடமிருந்து 1,105 புகையிலை பாக்கெட்டுகள், காளையாா்கோவிலைச் சோ்ந்த கருப்பையா மகன் சுப்பிரமணியனிடமிருந்து 392 புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் 43 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காா் பறிமுதல் செய்யப்பட்டது. சாகுல் ஹமீது, காதா்மைதீன், சித்திக் ராஜா, சுப்பிரமணியன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் சிபிசாய் சவுந்தா்யன் தலைமையில் போலீஸாா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

Advertisement