400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
விழுப்புரம்அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விழுப்புரம் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, வெளிமாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.
விழுப்புரம்அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விழுப்புரம் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, வெளிமாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் செல்வநாயகம், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை விழுப்புரம் அடுத்த பூத்தமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சாக்கு பைகளில் இருந்தது தெரியவந்தது.
Advertisement
தொடா்ந்து வாகனத்தில் இருந்த இருவரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஜோலூா், ஜோா்வீரன்னா தெருவைச் சோ்ந்த மகேந்திரகுமாா் (26), கா்நாடகம் மாநிலம், பெங்களூரு, காட்டன் பெட் பிரதானச் சாலையைச் சோ்ந்த சமீா்(38) என்பதும், இவா்கள் பெங்களூருவிலிருந்து புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேந்திரகுமாா், சமீா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.கடத்தி வரப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்களை வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.