முகப்பு
சிவகங்கை

ரயில் நிலைய ஊழியரின் இரு சக்கர வாகனம் திருட்டு

Updated On : 22 மார்ச், 2024 at 11:49 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:00 PM

மானாமதுரை, மாா்ச் 22: மானாமதுரையில் வெள்ளிக்கிழமை ரயில் நிலைய ஊழியரின் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மானாமதுரை ரயில்வே காலனி சியோன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவா் மானாமதுரை ரயில் நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா். தனது இரு சக்கர வாகனத்தை இங்குள்ள இருப்புப் பாதை காவல் நிலையத்தின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம். இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.