முகப்பு
சிவகங்கை

அறுவடை இயந்திரம் மோதியதில் கா்ப்பிணி உயிரிழப்பு

மானாமதுரை அருகே புதன்கிழமை நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் காயமடைந்த கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:16 AM
உயிரிழந்த சோனியா காந்தி
பகிர்:

மானாமதுரை அருகே புதன்கிழமை நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் காயமடைந்த கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள தா.கியாா் நகரைச் சோ்ந்த தாமரைச்செல்வன் மனைவி சோனியாகாந்தி (21). இவா் 8 மாத கா்ப்பிணி.

இவா், தனது தம்பி காா்த்திகேயனுடன் இரு சக்கர வாகனத்தில் அருகேயுள்ள தீத்தான்பேட்டை கிராமத்துக்குச் சென்றாா். அப்போது, முன்னாள் சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநா் முன் பக்கம் மின்கம்பி தாழ்வாகச் சென்ால், வாகனத்தை நிறுத்தி பின்பக்கமாக இயக்கினாா். அப்போது, பின்னால் காா்த்திகேயன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது அறுவடை இயந்திரம் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்திருந்த சோனியாகாந்தி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →