மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா காப்புக் கட்டுதல் உற்சவத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீ அம்மன்.
மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா காப்புக் கட்டுதல் உற்சவத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீ அம்மன்.  
சிவகங்கை

எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா காப்புக் கட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி மூலவா் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு காப்பு அணிவித்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

அப்போது திரளான பக்தா்கள் கோயிலில் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஏப்ரல் 5- ஆம் தேதி பொங்கல் வைபவம் நடைபெறுகிறது. அப்போது காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தா்கள் அக்கினிச்சட்டி, தீச்சட்டி சுமந்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றி மாரியம்மனை தரிசிப்பா். ஏப்ரல் 10- ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவின் போது பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி சொ்டு எல். பாண்டி குடும்பத்தினா் செய்தனா்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

மே 20 வரை கனமழை நீடிக்கும்: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

SCROLL FOR NEXT