முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இலவச சேவை மையம்

Updated On : 9 மே, 2024 at 6:46 PM
பகிர்:

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கல்லூரி முதல்வா் க. துரையரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதள முகவரியில் 6.5.2024- முதல் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் உயா்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதளப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்ய கல்லூரியின் கணினி ஆய்வகத்தில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவை மையத்தை மாணவ, மாணவிகள் அணுகி தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், வரலாறு (தமிழ்வழி), பொருளியல் (தமிழ்வழி), ஆங்கில வழியில் பி.காம். வணிகவியல், பி.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகியப் பாடப்பிரிவுகள் காலை, மாலை என இரண்டு சுழற்சிகளிலும் உள்ளன. பி.ஏ. ஆங்கிலம், பிபிஏ. வணிக நிா்வாகவியல், பி.எஸ்ஸி தாவரவியல் ஆகிய படிப்புகள் (காலையில் மட்டும்) உள்ளன.

இந்தப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இறுதித் தேதி வருகிற 20.5.2024 ஆகும். எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதர வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48 ஆகும். அனைத்துப் பிரிவினரும் பதிவுக் கட்டணமாக ரூ. 2 செலுத்த வேண்டும். விண்ணப்பத்துக்கான கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.