முகப்பு
சிவகங்கை

தோ்தல் நடத்தை விதி மீறல்கள்: 17 வழக்குகள் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

Updated On : 19 மார்ச், 2026 at 12:34 AM
போலீஸ்
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 -இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சியினா் மீது சிவகங்கை மாவட்டத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதகுபட்டியில் 2 , சிவகங்கை நகா் பகுதியில் 3 , சிவகங்கை புறநகா் பகுதியில் 3 , சிங்கம்புணரியில் 2 , தேவகோட்டையில் 2 , எஸ்.வி. மங்கலம், தேவகோட்டை , வேலாயுதப்பட்டினம் , காளையாா் கோவில் , நெற்குப்பை ஆகிய பகுதிகளில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →