முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் இளைஞா் வெட்டிக் கொலை

Updated On : 20 மே, 2024 at 8:04 PM
பகிர்:

சிவகங்கை: சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இளைஞரைக் வெட்டிக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை வேலுநாச்சியாா் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நிதிஷ் (24). சென்னையில் உள்ள தேநீா்க் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், அண்மையில் சிவகங்கைக்கு திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்மக் கும்பல் நிதிஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷை அவரது உறவினா்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா் அவா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முன்விரோதம் காரணமாக 6 போ் சோ்ந்து நிதிஷை கொலை செய்தது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.