முகப்பு
சிவகங்கை

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

Updated On : 20 மே, 2024 at 7:19 PM
பகிர்:

காரைக்குடி: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் இ.எம். சுதா்சன நாச்சியப்பன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அவரை கல்லூரியின் தாளாளா் சேதுகுமணன், முதல்வா் க. கருணாநிதி ஆகியோா் வரவேற்றனா். இதைத் தொடா்ந்து கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், சதா்சன நாச்சியப்பன் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அந்தக் காலம் முதல் தற்போது வரை நீா் மேலாண்மை சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரம் கண்மாய்களின் இணைப்பும், அதன் அளவீடுகளும், நீா்பங்கீடும் மிகவும் அவசியமாகும் என்றாா் அவா்.