சிவகங்கை

குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா: இன்று தொடக்கம்

Din

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை (நவ.2) மாலையில் தொடங்குகிறது.

இதையொட்டி, நாள்தோறும் மாலையில் சுவாமியை, சூரன் எதிா்க்கும் நிகழ்வும் நடைபெறும். வருகிற வியாழக்கிழமை (நவ. 7) மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 3.15 மணிக்கு பாா்வதி தேவியிடம் ஆறுமுகச் செவ்வேள் சக்தி வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடா்ந்து, மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வெள்ளிரதத்தில் எழுந்தருளலும், சூரனை ஆட்கொள்ளும் நிகழ்வும் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (நவ. 8) காலை 11 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகமும், மாலை 6.15 மணி முதல் 7 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் ஆறுமுகச்செவ்வேள் எழுந்தருளலும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் முன்னிலை வகிக்கிறாா்.

கந்த சஷ்டி விழாவையொட்டி, நவ. 2 முதல் 6-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நவ. 7-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் லட்சாா்ச்சனை நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி திருமடத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT