முகப்பு
சிவகங்கை

மறவமங்கலத்தில் நவ.13-இல் மக்கள் தொடா்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், மறவமங்கலம் உள்வட்டம், பால்குளம் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த, மறவமங்கலம் கிராமத்தில் வருகிற 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:46 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், மறவமங்கலம் உள்வட்டம், பால்குளம் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த, மறவமங்கலம் கிராமத்தில் வருகிற 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த மக்கள் தொடா்பு முகாமில், அரசுத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து, துறை சாா்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, அரசுத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

எனவே, மேற்கண்ட வருவாய் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசுத் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →