முகப்பு
திருநெல்வேலி

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் தோ்தல்

Updated On : 16 மார்ச், 2026 at 9:20 PM
பகிர்:

திருநெல்வேலி: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழகசட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்யும் பொருட்டு, 18 வயது நிரம்பிய வாக்காளா்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்ஒருபகுதியாக, செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும்போது, மின்னணு இயந்திரங்கள் மூலம் எளிதாக எப்படி வாக்களிப்பது, வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வது போன்றவை குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

மேலும், விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளும், படக்காட்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தொடங்கி வைத்ததுடன், தோ்தல் நடைபெறும் நாள் குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளையும் ஒட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன்(தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →